Skip to main content

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு உதவிகரம் நீட்டும் சிறுவன்!

Sep 25, 2020 270 views Posted By : YarlSri TV
Image

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு உதவிகரம் நீட்டும் சிறுவன்! 

கோவில்பட்டி அருகே ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த பெற்றோருக்கு வாழைப்பழம் விற்பனை செய்து சிறுவன் உதவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி முருகன் – கணேஷ்வரி. இவர்களுக்கு முனிஸ்வரன், கோகுல் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர், முனிஸ்வரன் 5ம் வகுப்பு படித்து வருகிறாராம். முருகனும் கணேஷ்வரியும் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனாவால் அந்த ஆலையில் தொழில் முடக்கமடைந்தது. இருப்பினும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்வதால் முருகன், குறைவான சம்பளத்துக்கு அந்த ஆலையில் பணிபுரிந்து வருகிறார். கணேஷ்வரி ஒரு தள்ளுவண்டியில் பழ விற்பனை செய்து வருகிறார். அதிலும் அவ்வளவாக வியாபாரம் இல்லையாம்.



ஊரடங்கால் வருமானம் இன்றி தனது பெற்றோர் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த முனிஸ்வரன் அம்மாவுக்கு உதவ முன்வந்து, தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் 2 மணி நேரம் வாழைப்பழம் விற்பனை செய்திருக்கிறார். தனது குட்டி சைக்கிளில் வாழைப்பழம் விற்பனை செய்து தான் ஈட்டும் ரூ.200 பணத்தை கணேஸ்வரியிடம் கொடுத்து வருகிறார். முதல் நாள் சிறுவன் கொண்டு வந்து கொடுத்த பணம், கணேஷ்வரியை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. தினமும் வாழைப்பழம் விற்ற பணத்தில் இருந்து முனீஸ்வரனுக்கு கணேஷ்வரி கொடுக்கும் ரூ.50ஐ வைத்து தனக்கு தேவையான புத்தகம், பென்சில் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொள்கிறார் முனீஸ்வரன்.



தனது பெற்றோர் கஷ்டப்படுவதை உணர்ந்து தான் இந்த வேலையை செய்வதாக முனீஸ்வரன் மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். அதே போல, தங்களின் கஷ்டத்தை இந்த சிறு வயதிலேயே உணர்ந்த மகன் வியாபாரம் செய்து வருவதாகவும் தான் கொடுக்கும் ரூ.50ஐ அவர் சேமித்து வருவதாகவும் முனீஸ்வரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். விளையாடும் பருவத்தில் பெற்றோருக்கு உதவி செய்யும் முனீஸ்வரனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை