Skip to main content

தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை!

Sep 25, 2020 257 views Posted By : YarlSri TV
Image

தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை! 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.



இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த  தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



தியாக தீபம் நினைவேந்தலை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்று நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று கூடி நாளை தொண்டமனாறு செல்வச் சந்திநிதியில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு முழுவதும் கடையடைப்புக்கும் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை