Skip to main content

இளைஞர்கள் நடத்திய நூதன போராட்டம்- அதிர்ந்த அதிகாரிகள்!

Sep 21, 2020 250 views Posted By : YarlSri TV
Image

இளைஞர்கள் நடத்திய நூதன போராட்டம்- அதிர்ந்த அதிகாரிகள்! 

திருச்சி ஓடத்துறஒ – மாம்பழச்சாலையை இணைக்கும் வகையில் 1976 ஆம் ஆண்டு 1.25 கோடி ரூபாய் செலவில் 15 மீட்டர் அகலத்தில் 541.46 மீட்டர் நீளத்தில் காவேரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு அப்போதைய மத்திய உள்ளாட்சி துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டி மற்றும் தமிழக ஆளுநர் ஆலோசகர் சுப்ரமணியம் ஆகியோரால் திறக்கப்பட்டது.



அந்த பாலம் பழுதடைந்த காரணத்தால் கடந்த 2016 ஆம் ஆண்டு 1.70கோடி ரூபாய் மதிப்பில் பாலம் சீரமைக்கப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இருந்தபோதும் பணிகள் நிறைவடைந்த நிலையில் பாலத்தின் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தினந்தோறும் விபத்துகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டியும், தரமற்ற சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினர் அந்த பாலத்தில் சாக்கு போட்டி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.



உறுதியளித்தப்படி பாலத்தை சீரமைக்கவில்லையென்றால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.



பாலத்தில் அதிர்வை குறைக்கும் வகையில் பேரிங் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பேரிங் பழையதாகி விட்டதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்லும் காரணத்தால் சாலைகளில் உள்ள இணைப்புகளில் விரிசல்கள் ஏற்படுகிறது. விரைவில் அந்த பேரிங்கை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் வீரமணி தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை