Skip to main content

நினைவுகூர்வது எப்படி பயங்கரவாதமாகும்? ஈ.சரவணபவன்

Sep 21, 2020 310 views Posted By : YarlSri TV
Image

நினைவுகூர்வது எப்படி பயங்கரவாதமாகும்? ஈ.சரவணபவன் 

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆயுத இயக்கங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.அதன் பின்னரே, தியாக தீபம் திலீபன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சா வழியில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வீரச் சாவைத் தழுவிக் கொண்டார்.எனவே திலீபனை நினைவுகூர்வது எப்படிப் பயங்கரவாதமாகும். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இப்போது பயங்கரவாதச் சாயம் பூசப்படுகின்றது.தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஆட்சியிலிருப்பவர்கள் எப்போதும் தூக்கும் ஆயுதம்தான் ‘பயங்கரவாதம்’.2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மக்கள் தியாக தீபம் திலீபனை பொது வெளியில், யாரும் இடையூறின்றி, நல்லிணக்கத்துக்கு குந்தகமில்லாமல் நினைவுகூர்ந்து வந்தனர்.2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொலிஸார் இதற்கு நீதிமன்றம் ஊடாகத் தடை கோரிய போதும் அதற்கு மன்று மறுப்புத் தெரிவித்திருந்தது.இப்போது ராஜபக்சக்களின் யுகம். தமிழர்களை மிதித்து அடிமைகளாக வைத்திருப்பது அவர்களின் நோக்கம்.அதற்காக எதுவும் செய்வார்கள். நினைவுகூரல் என்பது எங்களின் மரபுரிமை சார்ந்தது. அதனைச் செய்வதற்குக் கூட அவர்களின் அனுமதியில் நாங்கள் தங்கியிருக்கவேண்டியிருக்கின்றது.பொதுமன்னிப்புஇலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது. ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி அந்த உடன்பாட்டுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை பலாலி இராணுவ முகாமில் வைத்து,இந்திய, இலங்கை இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்த,ஜெனரல் சேபால ஆட்டிக, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிரதிநிதியாக இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.சகல போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கடிதத்தை, அந்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில்,ஆயுதக் கையளிப்பில் பங்கேற்றிருந்த யோகியிடம் அவர் வழங்கியிருந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட பின்னர், அந்த அமைப்பிலிருந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்கிய பின்னரே,தியாக தீபம் திலீபன் தனது உணவு ஒறுப்புப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பித்தார். அவரது 5 அம்சக் கோரிக்கைகளில் தனி நாட்டை வலியுறுத்தும் எவையும் இடம்பெறவில்லை.இவ்வாறான நிலையில் அவர் செப்ரெம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.

இப்படியான நிலையில் தியாக தீபம் திலீபனை அரசு எவ்வாறு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்று முத்திரை குத்த முடியும்.அவரை நினைவுகூர்வதை பயங்கரவாதச் செயற்பாடு என்று, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடு என்று எப்படிக் கூறமுடியும்.இன்று ராஜபக்ச அரசில் அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, தியாக தீபம் திலீபன் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த போது நேரில் வந்து பார்வையிட்டிருந்தார்.திலீபனை நினைவுகூர்வது ஒருபோதும் பயங்கரவாதமாகாது. அரசு அதை உணர்ந்து கொள்ளவேண்டும். வெறுமனே தமிர்களை வஞ்சிப்பதற்காகவே,‘பயங்கரவாத’ கோசத்தை ராஜபக்ச அரசு தூக்கிப் பிடிக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் உள்ளிட்ட சகலரும் உய்த்தறிந்து உணர்ந்து கொள்ளவேண்டும்.ஒற்றுமைதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப் பெரிய மாற்றம் நடந்தேறியிருக்கின்றது.தமிழ்த் தேசியத்தை உயிர்நாடியாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓர் புள்ளியில் இணைந்துள்ளன.ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தமிழரசியலில் பிரிவுகளால் தமிழ் மக்கள் வெந்து வெதும்பி வெறுத்துபோயிருந்த சூழலில், இந்த ஒற்றுமை என்பது புதியதொரு ஒளிக்கீற்றாய் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது.இந்த ஒற்றுமை இன்னமும் வலுப்படவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் இதயத்தில் இருத்திக் கொள்ளவேண்டும்.இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்கு, கட்சிகளைப் பிளவுபடுத்தி அதில் வெற்றிகாணும் தென்னிலங்கை, அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிகளை முன்னெடுப்பார்கள். தமிழ் கட்சிகள் அவதானமாகச் செயற்படவேண்டும்.அரசே பொறுப்புதமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ச அரசு மிரண்டுபோயுள்ளது. அதனால்தான் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய,நினைவேந்தலுக்கான தடையை அரசு விதிக்கவில்லை. அங்குள்ள நீதிமன்றங்களே விதித்துள்ளன என்று கூறுகின்றார்.அவர் ஒன்றை விளங்கிக் கொள்ளவேண்டும். நீதிமன்றங்களில் நினைவேந்தலுக்கான தடையைக் கோரியது பொலிஸார், அவர்கள் அரசின் ஓர் அங்கம்.பொலிஸார் ஊடாக நீதிமன்றங்களில் தடை உத்தரவுகளைப் பெற்றுவிட்டு, அதற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க ஹெகலிய முற்படக் கூடாது, என்றுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபருக்கு 4 மாதம் சிறை!

18 Hours ago

பிரதமர் மோடியின் ஆட்சியில் நரகத்தை காண்கிறோம்: சித்தராமையா

18 Hours ago

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் பலி!

18 Hours ago

இங்கிலாந்தில் ஜி-7 உச்சிமாநாடு தொடக்கம் - கொரோனாவுக்கு பின் உலக தலைவர்கள் நேரில் சந்திப்பு!

18 Hours ago

பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது!

18 Hours ago

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,027 பேர் கைது!

18 Hours ago

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது-மஹிந்த அமரவீர

18 Hours ago

இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது!

18 Hours ago

பயணக்கட்டுப்பாடு 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிப்பு...

18 Hours ago

கர்நாடகத்திற்கு ஓரிரு நாளில் அதிக தடுப்பூசிகள் வரும்: எடியூரப்பா

18 Hours ago

பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ராஷி கண்ணா?

2 Days ago

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் கார்த்தி!

2 Days ago

ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கும் ஜி7 நாடுகள்!

2 Days ago

குவைத் தூதரகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார் ஜெய்சங்கர்!

2 Days ago

மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் கொரோனாவால் 4 பேர் மரணம்!

2 Days ago

கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

2 Days ago

அவசர தேவை ஏற்படின் சுகாதார பிரிவினர் கடமையாற்ற வேண்டும் – சமன் ரத்னபிரிய

2 Days ago

குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி தடுப்பூசி நன்கொடை!

2 Days ago

கட்டுப்பாடுகளுக்கு அமையவே பயணத்தடை தளர்த்தப்படும் – இராணுவ தளபதி

2 Days ago

142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- சென்னையில் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு பங்கேற்பு!

2 Days ago

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் -பந்துல குணவர்தன!

3 Days ago

அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு - பரபரப்பு தகவல்கள்

3 Days ago

வவுனியாவில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

3 Days ago

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய சசிகலா முடிவு!

3 Days ago

டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்கா!

3 Days ago

பிக்பாஸ் சீசன் 5 எப்போது? - வெளியான புதிய தகவல்

3 Days ago

கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

3 Days ago

பிரான்சில் வெளிநாட்டினர் சுற்றுலா வர தளர்வுகள் அறிவிப்பு!

3 Days ago

சுகாதார அமைச்சின் வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

3 Days ago

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

3 Days ago

மோடி அறிவித்த இலவச தடுப்பூசி திட்டத்துக்கு உத்தவ் தாக்கரே வரவேற்பு!

4 Days ago

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு!

4 Days ago

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய உண்மையை அறிய சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் - அமெரிக்கா திட்டவட்டம்

4 Days ago

நுவரெலியாவில் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பம்!

4 Days ago

ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வாகிறார்!

4 Days ago

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்குகிறது!

4 Days ago

கொரோனா தடுப்பு பணிக்காக சுப்ரீம் கோர்ட்டை பாராட்டிய சிறுமி - பரிசு அனுப்பிய தலைமை நீதிபதி!

4 Days ago

தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜனை நிறுத்தி நடத்திய ஒத்திகையால் 22 நோயாளிகள் பலியா?

4 Days ago

இலவச தடுப்பூசி மற்றும் ரேஷன் பொருட்களுக்கு ரூ.1.45 லட்சம் கோடி கூடுதல் செலவு!

4 Days ago

ராமாயண கதையில் சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை!

4 Days ago

நயினாதீவு வருடாந்த ஆலய உற்சவம் பிற்போடப்பட்டது!

5 Days ago

கனடாவில் வாகனத்தை மோதவிட்டு 4பேர் படுகொலை!

5 Days ago

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.43 கோடியை தாண்டியது!

5 Days ago

வருகிற 12-ந்தேதி திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

5 Days ago

பாகிஸ்தானில் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல் : பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

5 Days ago

காரணமின்றி கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை!

5 Days ago

மட்டக்களப்பில் 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

5 Days ago

2022 செப்டெம்பரில் பிரதமராகின்றார் நாமல்! – பிரபல ஜோதிடர் கணிப்பு

5 Days ago

புனே ரசாயன ஆலையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு!

5 Days ago

இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி நடக்கிறது: குமாரசாமி குற்றச்சாட்டு!

5 Days ago

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன- சென்னையில் வாகன சோதனை தீவிரம்!

6 Days ago

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் அரிதாகவே காணப்படுகிறது -ரொஷான் ரணசிங்க

6 Days ago

டெல்லியில் மிகப்பெரிய ஊழல் நடக்காமல் மத்திய அரசு தடுத்துள்ளது: பாஜக பெருமிதம்!

6 Days ago

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - சீனாவில் அங்கீகாரம்

6 Days ago

கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு - அவசரமாக தரை இறக்கப்பட்டது!

6 Days ago

உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி - போரிஸ் ஜான்சன்

6 Days ago

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது!

6 Days ago

காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட வாகனத்திலிருந்து பாய்ந்த நபர் உயிரிழந்தார்!

6 Days ago

பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் கைது!

6 Days ago

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை!

6 Days ago

தயவுசெய்து இந்த திட்டத்தை நிறுத்தவேண்டாம் -பிரதமருக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்...

7 Days ago

வடகொரியா அணு ஆயுத பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணப்படும் - ரஷிய அதிபர் புதின் நம்பிக்கை!

7 Days ago

கொரோனா தொற்றினால் கர்ப்பிணி பெண் ஒருவுர் மரணம்!

7 Days ago

இந்தியாவுக்கு அமெரிக்கா தடுப்பூசி அனுப்புகிறது - ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எம்.பி.க்கள் பாராட்டு!

7 Days ago

புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம்; ஊழியர்கள் பணிக்கு செல்வதை புறக்கணிக்குமாறும் கோரிக்கை!

7 Days ago

அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் இருக்கிறார்: ஐ.நா.சபை தகவல்!

7 Days ago

காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

7 Days ago

71 கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து கம்போடிய நாயகனாக வலம் வந்த எலி ஓய்வு!

7 Days ago

மீண்டும் பேய் பட இயக்குனருடன் கூட்டணி அமைத்த யோகிபாபு... வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

7 Days ago

இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். இடையே தொடரும் ‘மவுன யுத்தம்!

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை