Skip to main content

காயமா ? சாயமா ? புகைப்படம் ஏற்படுத்தும் கேள்விகள் !

Sep 23, 2020 285 views Posted By : YarlSri TV
Image

காயமா ? சாயமா ? புகைப்படம் ஏற்படுத்தும் கேள்விகள் ! 

பாஜவினர் என்றால் போட்டோ ஷாப் செய்யப்படும் போட்டோ மூலம் அரசியல் செய்வார்கள் என்கிற பொதுவான விமர்சனம் இருந்து வருகிறது. பல நேரங்களில் அப்படியான போட்டோக்கள் மூலம் வட மாநிலங்களில் கலவரம் வரை நடந்துள்ளன. அந்த போட்டோக்கள் போலியாக உருவாக்கப்பட்டவை என தெரிவதற்குள் சில பல விளைவுகள் ஏற்பட்டு முடிந்திருக்கும். அதன் பிறகுதான் அந்த போட்டோ போலியானது என தெரியவரும்.



சில நேரங்களில் மக்கள் கூட்டமில்லாத பொதுக்கூட்ட அரங்குகளில், போட்டோ ஷாப் மூலம் அதிக மக்கள் இருப்பது போல காட்டுவது என தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப போட்டோக்களை வெளியிடுவார்கள். பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டு தவறு என நிரூபிக்கப்படும்.



அந்த கட்சியின் எச். ராசா போன்ற தலைவர்கள் சில நேரங்களில் தவறான போட்டோக்களை வெளியிட்டு, அதன் மூலம் அரசியல் செய்வதும் பின்னர், தவறு என தெரிந்து அந்த போட்டோவை நீக்குவதும் வழக்கமாக நடைபெறுவதுதான்.



ஆனால், இந்த முறை சற்று வித்தியாசமாக போட்டோ வெளியிட்டு அரசியல் செய்துள்ளனர். சென்னை நங்கநல்லூர் பகுதியில், ஒரு தனியார் சுவற்றில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக திமுகவினருக்கும் பாஜகவினருக்கு வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.



அப்போது, பாஜகவினர் தாக்கப்பட்டதாக ஒரு போட்டோவை பாஜக பிரமுகர்கள் உலவ விட்டுள்ளனர். அந்த போட்டோவில் நான்கு பேர் கையில், தலையில் காயம்பட்ட கட்டுகளுடன் அமர்ந்துள்ளனர்.



இடது கையிலும், தலையிலும் கட்டுகளுடன் அமந்துள்ளார் பாஜக பெண் நிர்வாகி இருவர். கையில் பல சுற்று கட்டுகள் போட்டுள்ள நிலையில், அதற்கு மேலே ரத்தம் கசிந்துள்ளதுபோல காயம் தெரிகிறது. தலையில் போடப்பட்டுள்ள கட்டிலும் ரத்த காயம் உள்ளதுபோல தெரிகிறது. இந்த போட்டோவை வெளியிட்டுள்ள சிலர், காயம்பட்ட இடத்துக்கு மருத்துவம் செய்யத்தான் கட்டு போடுகின்றனர். அதை மீறி ரத்தம் கசிவதுபோல எந்த மருத்துவர் கட்டு போட்டார் என விமர்சனம் செய்துள்ளனர்.



அதுபோல, மற்றொரு நிர்வாகி கையில் கட்டுபோட்டுள்ளார், அந்த கட்டிலும் ரத்தகாயம் உள்ளதுபோல தெரிகிறது. அப்படியும் அந்த கையில் பேனா பிடித்துக் கொண்டு கணக்கு வழக்கு பார்க்கிறார். மற்ற இரண்டு நிர்வாகிகள் புகைப்படத்துக்கு சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார்கள்.



இவ்வளவு காயம் உள்ள நிலையில், மருத்துவமனை செல்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது நியாயமா என சமூக வலைதளங்களில் கேட்டுள்ள பலரும் , கையில் சிவப்பு சாயதை பூசிக்கொண்டு பாஜகவினர் போஸ் கொடுப்பதாக விமர்சனம் செய்துள்ளனர். அது காயமா ? சாயமா ? எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை