Skip to main content

தீ விபத்துக்குள்ளான எம்.டி. நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர்களிடம் மேலும் இழப்பீட்டுத் தொகையைக் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது!

Sep 22, 2020 347 views Posted By : YarlSri TV
Image

தீ விபத்துக்குள்ளான எம்.டி. நியூ டயமன்ட் எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர்களிடம் மேலும் இழப்பீட்டுத் தொகையைக் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது! 

விபத்துக்குள்ளான எம்.டி. நியூ டயமன்ட் கப்பல் தொடர்பான மற்றுமொரு சுற்று விவாதம் நேற்றுத் திங்கட்கிழமை(21) சட்டமா அதிபர் திணைக்களத்தில் நடைபெற்றது.



கடல் சுற்றுச் சூழல் மாசுபாடு ஆணையகத்தின் மற்றும் எண்ணெய்க் கப்பலினால் ஏற்படும் கடல் மாசுபாடு குறித்த அறிக்கையைத் தயாரிக்கும் நிபுணர்கள் குழுவுடன் இதன்போது சட்டமா அதிபர் கலந்துரையாடலை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.



விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலின் உரிமையாளர்கள் சட்டத்தரணிகளிடம் முன்னதாகவே 340 மில்லியன் ரூபா கோரிக்கை விடுத்துள்ள சட்டமா அதிபர் திணைக்களம் தீ விபத்தைத் தொடர்ந்து கடல் சூழலுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த அறிக்கையையும் தொகுத்து வருகின்றனர்.



அதன்படி, தீ விபத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த நிபுணர் மதிப்பீட்டைத் தொடர்ந்து மேலும் இழப்பீட்டுத் தொகையைக் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த-03 ஆம் திகதி காலை-08 மணியளவில் அம்பாறை சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த எம்.டி. நியூ டயமன்ட் கப்பலின் பிரதான இயந்திர அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து அதில் தீ பரவியிருந்தது.



இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சியின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை