Skip to main content

நவீன தீண்டாமையைக் ஸ்டாலின் கடைப்பிடிக்கிறார் - பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

Sep 22, 2020 249 views Posted By : YarlSri TV
Image

நவீன தீண்டாமையைக் ஸ்டாலின் கடைப்பிடிக்கிறார் - பா.ஜ.க தலைவர் எல்.முருகன் 

கன்னியாகுமரியிலிருந்து செல்லக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர், நிச்சயமாக மத்திய அமைச்சராக இருப்பார். கன்னியாகுமரிக்கு ஒரு அமைச்சர் கிடைக்கப்போகிறார்' என்றார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன்.




கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் நேற்று தக்கலை அருகேயுள்ள பருத்திக்காட்டுவிளையில் நடந்தது. மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.



நிர்வாகிகள் கூட்டத்தில் எல்.முருகன் பேசுகையில், ``தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்துக்கு விதைபோட்டது கன்னியாகுமரி மாவட்டம். நரேந்திர மோடியின் நல்லாட்சி தமிழகத்துக்கும் தேவை என தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். ஒரு மாவட்டத்தில் தினமும் இரண்டாயிரம் பேராவது பா.ஜ.க-வில் சேர்ந்துவருகிறார்கள். சின்னக் கறுப்பர் கூட்டம், நாம் வழிபடக்கூடிய முருகனின் கந்த சஷ்டிக் கவசத்தை இழிவுபடுத்தியது. அந்தக் கறுப்பர் கூட்டத்தை இந்த காவிக் கூட்டம் ஓட ஓட விரட்டியது. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வேலை செய்த செந்தில் வாசனுக்கும், தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம் என ஸ்டாலினிடம் கேள்வி கேட்டோம். இன்னிக்கி வரைக்கும் ஸ்டாலின் வாய் திறக்கவில்லை. எப்போதெல்லாம் இந்துக்கள் திருவிழா வருதோ அப்போ எல்லாம் அமைதி ஆகிடுவாங்க. தி.மு.க-வுல ஒரு கோடி இந்துக்கள் இருக்காங்கன்னு சொல்றாங்க. அந்த ஒரு கோடி இந்துக்களுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டாமா?




பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்



ரொம்ப நாளைக்குப் பிறகு பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தேசியக் கல்விக் கொள்கை கொடுக்குறாங்க. உலகத்துக்கே வழிகாட்டியாகத் திகழக்கூடிய தேசிய கல்விக் கொள்கையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார். அதில், தொழில் கல்விக்கும், தாய்மொழி கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதுபோல ஆங்கிலம் தவிர்த்து இன்னொரு மொழியும் கத்துக்கலாம். தமிழை வேற மாநிலங்கள்லயும் கத்துக் கொடுக்கலாம். ஏற்கெனவே சி.பி.எஸ்.சி பள்ளிகளில் மூணு மொழி, நாலு மொழி கத்துக் கொடுக்கிறாங்க. அப்படி இருக்கும்போது அரசுப் பள்ளியில படிக்கிற குழந்தைங்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை. நவீன தீண்டாமையை ஸ்டாலின் கடைப்பிடிக்கிறார்.



பிறமொழி படிப்பதற்கு மாணவர்களும் பெற்றோரும் தயாராக இருக்காங்க. சமூகநீதியைப் பற்றிப் பேச தி.மு.க-வைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வரவிருக்கிறது. கன்னியாகுமரியில் வீசும் அலை, சென்னை கோட்டையில் எதிரொலிக்கும். பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிறைய நல்ல திட்டங்களை கொண்டுவந்திருக்கிறார். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களிலும் அதிகம் பலனடைவது தமிழகம்தான். எனவே, கன்னியாகுமரியிலிருந்து செல்லக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் நிச்சயமாக மத்திய அமைச்சராக இருப்பார். கன்னியாகுமரிக்கு ஓர் அமைச்சர் கிடைக்கப்போகிறார். நாமக்கு மத்திய அமைச்சர் கிடைக்கும் வரை, நமது எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் சட்டசபையில் அமரும்வரை நமக்கு ஓய்வு இல்லை" என்றார்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ``தந்தை பெரியார் மட்டுமல்ல, யார் நல்ல கருத்துகளைக் கூறியிருந்தாலும் அதை பா.ஜ.க எடுத்துக்கொள்ளும். பெரியார் தொடர்பாக எனது பேச்சால், கட்சிக்குள் எந்தவிதச் சலசலப்பும் இல்லை. தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் தொடர்கிறது. வேளாண்மை மசோதாவுக்கு எதிரான தி.மு.க., காங்கிரஸின் போராட்டத்தால் தமிழகத்தில் எந்தவிதத் தாக்கமும் இருக்காது. ஸ்டாலினுக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. மத்திய அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதைக் குறை கூறுவதுதான் ஸ்டாலினுடைய நோக்கம். இவர்களைத் தவிர. மக்களும் விவசாயிகளும் தெளிவாக இருக்கிறார்கள்" என்றார்.



 



 



Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை