Skip to main content

கொடி ஒளி திட்டத்தினை தொடங்கி இருக்கும் தமிழக பாஜக, மோடியின் அடுத்த பிறந்த தினத்திற்குள் 70 ஆயிரம் கொடி ஒளிகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது!

Sep 18, 2020 305 views Posted By : YarlSri TV
Image

கொடி ஒளி திட்டத்தினை தொடங்கி இருக்கும் தமிழக பாஜக, மோடியின் அடுத்த பிறந்த தினத்திற்குள் 70 ஆயிரம் கொடி ஒளிகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது! 

கொடி ஒளி திட்டத்தினை தொடங்கி இருக்கும் தமிழக பாஜக, மோடியின் அடுத்த பிறந்த தினத்திற்குள் 70 ஆயிரம் கொடி ஒளிகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது



பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக அறிவுசார் பிரிவு சார்பாக “கொடி ஒளி மற்றும் பிரதமரின் நலத்திட்ட அடைகாப்பகம் விழா” சென்னையில் வெகு விமர்சையாக சென்னையில் கொண்டாடப்பட்டது. அறிவுசார் பிரிவின் தமிழ்மாநில தலைவர் ரா. அர்ஜூனமூர்த்தி தலைமையில், மாநில செயலாளர் முனைவர் மு. ரஜினி விழாவினை ஏற்பாடு செய்து, தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சிக்கு நடிகை கௌதமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



இந்தியாவிலேயே முதன் முறையாக வேறு எந்த கட்சியும் செய்யாத ஒரு பெரும் சாதனையாக, ’கொடி ஒளி’ எனப்படும் சூரிய வெப்பத்தால் இரவில் தானாகவே ஒளிரும் கொடி கம்பம் மற்றும் தெரு விளக்கு பொருத்தப்பட்டு பாரதிய ஜனதா கட்சியின் கொடியை பறக்கச் செய்த்தார்கள். இந்த கொடி ஒளி திட்டம் அடுத்த 17 . 09 . 2021க் குள் தமிழகமெங்கும் 70,000 கொடி ஒளி மற்றும் வாழ்வாதார அடைகாப்பகம் குடிசை வாழ் மக்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியையும் தத்தெடுக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.



நடிகை கௌதமி அறிவுசார் பிரிவின் சார்பாக, எழுபது அடிப்படை வசதியில்லாத ஏழை, எளிய மக்களுக்கு தலா ஐந்து லட்சம் வீதம் 3 . 5 கோடிக்கான பிரதமரின் காப்பீடு மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை