Skip to main content

இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்!

Sep 18, 2020 272 views Posted By : YarlSri TV
Image

இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்! 

பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடி வருகிறார். 



இதையொட்டி, பல்வேறு நாட்டுத் தலைவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் நரேந்திரமோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 



இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட புதின் பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது. 



மேலும், இந்த தொலைபேசி உரையாடலின்போது ரஷிய-இந்திய உறவை மேம்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து செயல்பட இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்து கொண்டனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை