Skip to main content

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற சீனாவிடம் நீங்கள் பேசும்போது, பாகிஸ்தானுடனும் பேச வேண்டும் - எம்.பி. பரூக் அப்துல்லா

Sep 20, 2020 270 views Posted By : YarlSri TV
Image

லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற சீனாவிடம் நீங்கள் பேசும்போது, பாகிஸ்தானுடனும் பேச வேண்டும் - எம்.பி. பரூக் அப்துல்லா 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது காஷ்மீர் எம்.பி.யும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பாகிஸ்தானுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகளை ஆதரித்து பேசினார். இதுபற்றி அவர் கூறுகையில், “எல்லை மோதல்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதை சமாளிக்க ஒரு வழி கண்டுபிடிக்கப்பட வேண்டும். லடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற சீனாவிடம் நீங்கள் பேசும்போது, இந்த சூழ்நிலையில் இருந்து வெளியேற நாம் நம்முடைய மற்ற அண்டை நாடுகளுடனும் பேச வேண்டும்” என கூறினார்.



மேலும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடந்த என்கவுண்ட்டரில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ராணுவம் ஒப்புதல் அளித்தது குறித்து பரூக் அப்துல்லா மகிழ்ச்சி தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை