Skip to main content

ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்!

Sep 19, 2020 257 views Posted By : YarlSri TV
Image

ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்!  

ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.



ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி கூறியதாவது:-



ஐ.நா. பொதுசபை கூட்டம் வரும் 21ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில் இரண்டு அமர்வுகளில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்க உள்ளார். முதலில் பொது அமர்வில் நாட்டின் நிலைப்பாடு தொடர்பாக பிரதமர் உரையாற்ற உள்ளார். அதன்பின்னர் ஐ.நா. பொது சபை உருவாக்கப்பட்ட 75-வது ஆண்டு சிறப்பு அமர்விலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.



இதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பிரதமர் முக்கிய தகவல்களை வெளியிடுவார். இந்த பொது சபைக் கூட்டத்தின் இடையே நடைபெற உள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.  ஒரு நல்ல தருணத்தில் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பங்கேற்க உள்ளது.



கொரோனா மற்றும் 75-வது ஆண்டில் ஐ.நா. பொது சபை அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், வித்தியாசமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நமக்கு தற்போது வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதற்கு முன்பு நாம் இந்த குழுவில் இருந்த போது உள்ள நிலை தற்போது உலகில் இல்லை, உலகம் மாறியுள்ளது. இந்த நிலையில் அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நமது முன்னுரிமைகளை முன்னெடுப்போம்.



இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை