Skip to main content

குன்றும் குழியுமாக காணப்படும் செம்மணி உப வீதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Sep 19, 2020 342 views Posted By : YarlSri TV
Image

குன்றும் குழியுமாக காணப்படும் செம்மணி உப வீதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! 

குன்றும் குழியுமாக காணப்படும் செம்மணி உபவீதியை செப்பனிடுமாறுசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



யாழ் கண்டி வீதியினையும் பருத்தித்துறை வீதியினையும் இணைக்கும்  செம்மணி வீதியில்  யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவிற்கு அருகாமையில் நல்லூர் ஆலயத்தினை பிரதிபலிக்கும்   அலங்கார வளைவு மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்



நிர்மாணிக்கப்பட்டுவருகின்றது 



கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அலங்கார வளைவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமாண பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அப்பாதைக்கு மாற்றீடாக வேறு ஒரு மாற்று பாதை போடப்பட்டு   மாற்று வீதி ஊடாகவே மக்கள்பயணிக்க வேண்டியுள்ளது அலங்கார வளைவின்  நிர்மாணப் பணி நிறைவுறாது தாமதமாகுவதன் காரணமாக அந்த மாற்று பாதையின் ஊடாக பயணிப்பவர்கள்  சிரமத்தினை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ளனர்



அதிகளவானோர் பயன்படுத்தும் குறித்த வீதி குன்றும் குழியுமாகவுள்ளதால்  நாளாந்தம் போக்குவரத்துச்  செய்வோர் கடும்அசௌகரயத்திற்குள்ளாகின்றனர்



குறித்த உபவீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் வாகனங்களில் பயணிப்போர்விழுந்தெழும்பி பல நிமிடங்களைச் செலவிட்டே அப்பகுதி ஊடாக போக்குவரத்துச் செய்ய வேண்டியுள்ளதாக அப்பாதை ஊடாக பயணம் செல்வோர்  கவலை வெளியிட்டுள்ளனர்



எதிர்வரும் மாதம் மழை ஆரம்பிக்கவுள்ளது மழைகாலத்தில் குறித்த உப வீதியூடாக பயணம் செய்வோர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டி நேரிடும் எனவே சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தினர்  உப வீதியினை செப்பனிட்டு பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை