Skip to main content

நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

Sep 19, 2020 265 views Posted By : YarlSri TV
Image

நான் ஒரு விவசாயி’ என இனியொரு முறை முதலமைச்சர் பழனிசாமி சொல்ல வேண்டாம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 

பாராளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிவித்த விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோண்மணி அகாலி தளத்தின் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார்.



இந்நிலையில், அ.தி.மு.க. அரசு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:



மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்ட மசோதாக்களும் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் வாழ்வுக்கும் எதிரான சட்டங்களாகும்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிரோண்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார்.



ஆனால் மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு, மக்களவையில், அந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு முற்றிலும் எதிரானவை என அறிந்தே, அ.தி.மு.க. மகிழ்ச்சியுடன் ஆதரவளித்துள்ளதற்கு, தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



ஆன்லைன் வர்த்தகம் செய்யும் விவசாயி, நிச்சயம் பான் எண் பெற்றிருக்க வேண்டும் என்பது, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள விவசாயத்தை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வரும் சதி ஆகும். மாநிலப் பட்டியலில் வேளாண்மை இருந்தும் மத்திய பா.ஜ.க. அரசு, விவசாயிகளுக்கு எதிரான இந்தச் சட்டங்கள் குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை.



முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவளித்து, விவசாயிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பழனிசாமியிடம் நான் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். இனியொரு முறை மேடைகளில் நின்று 'நான் ஒரு விவசாயி' என்று மட்டும் சொல்லாதீர்கள் என தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை