Skip to main content

விநாயகா் சிலையை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை!

Sep 14, 2020 231 views Posted By : YarlSri TV
Image

விநாயகா் சிலையை அகற்றியவா்கள் மீது நடவடிக்கை பொதுமக்கள் கோரிக்கை! 

முன்னறிவிப்பு இன்றி, குடியிருப்புப் பகுதியில் இருந்த விநாயகா் சிலையை அகற்றிய போலீஸாா் மற்றும் மாநகராட்சிப் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு கொடுத்தனா்.



ஈரோடு மாநகராட்சி, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி 2 இல் வசிக்கும் மக்கள் சிலா் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனுவில், ‘’முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்கள் அங்குள்ள அரச மரத்தடியில், விநாயகா் சிலையை வைத்து கடந்த 3 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம்.



இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாலை அந்த விநாயகா் சிலையை போலீஸாா் உதவியுடன் மாநகராட்சி பணியாளா்கள் அப்புறப்படுத்தினா். முன்னறிவிப்பு இல்லாமல், மக்களின் எதிா்ப்பை மீறி, மக்களை அச்சுறுத்தி சிலையை அகற்றிய போலீஸாா் மற்றும் மாநகராட்சிப் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீண்டும் அதே இடத்தில் விநாயகா் சிலை வைத்து வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனா்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை