Skip to main content

பிள்ளைகளுக்கு மனஉறுதி, தோல்வியை தாங்க கூடிய சக்தியை சொல்லி கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்

Sep 14, 2020 254 views Posted By : YarlSri TV
Image

பிள்ளைகளுக்கு மனஉறுதி, தோல்வியை தாங்க கூடிய சக்தியை சொல்லி கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்  

பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து பயப்படுவது நியாயம் தான். ஆனால், அதே பிள்ளைகளுக்கு மன உறுதியையும், தோல்வியை தாங்கக்கூடிய சக்தியையும் சொல்லிக் கொடுங்கள் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பெற்றோர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.



நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா, மோதிலால் ஆகியோர் ஒரேநாளில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதே நேரத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும்,



சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உருக்கமான பேசிய வீடியோ நேற்று வெளியானது அதில்: மருத்துவர்கள் ஆக வேண்டும் என்று கனவோடு இருக்கும் மாணவ செல்வங்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம்.



நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.



அதுவும் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு செய்தியை கேட்கும் போதும் நெஞ்சு படபடவெனவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர்கள் குடும்பத்தை நினைத்தால் பதபதப்பா இருக்கு, மாணவ செல்வங்களே இனியாரும் தற்ெகாலை முடிவை எடுக்காதீர்கள்.



பெற்றோர்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுவது நியாயம் தான் அதற்கு பிள்ளைகளுக்கு மனஉறுதியை முதலில் சொல்லிக் கொடுங்கள், அதே நேரத்தில் தோல்வியை எப்படி தாங்கிக் கொள்வது என்று சொல்லி கொடுங்கள்.



உங்களில் ஒருவனா? உங்கள் வீட்டில் ஒருத்தனா? உங்களையெல்லாம் உரிமையோடு கேட்கிறேன். தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் முதலில் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையும் கொடுங்கள் பிளீஸ் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசிய வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை