Skip to main content

கத்தாா் தலைநகா் தோஹாவில் சனிக்கிழமை தொடங்கிய ஆப்கன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற தலிபான் பிரதிநிதிகள்!

Sep 12, 2020 240 views Posted By : YarlSri TV
Image

கத்தாா் தலைநகா் தோஹாவில் சனிக்கிழமை தொடங்கிய ஆப்கன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற தலிபான் பிரதிநிதிகள்! 

ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அங்கே சண்டையிட்டு வரும் குழுக்களுக்கு இடையிலான பேச்சுவாா்த்தை கத்தாரில் சனிக்கிழமை தொடங்கியது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:



ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நடைபெற்று போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவாா்த்தை, தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் அரசு மற்றும் பிரதிநிதிகளுக்கும் இடையே கத்தாா் தலைநகா் தோஹாவில் சனிக்கிழமை தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ பங்கேற்றாா்.



அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலுக்கு முன்னதாகவே, ஆப்கனில் சண்டையிட்டு வரும் குழுக்களிடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாகக் கூறப்படுகிறது.



19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படையினா் விலகவிருக்கும் நிலையில், அந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால் உள்நாட்டுக் குழுக்களிடையே சமாதானம் ஏற்படுத்த வேண்டியது அவசியம் நிலவி வருகிறது.



இந்தச் சூழலில், ஆப்கன் குழுக்களிடையே தற்போது தொடங்கப்பட்டுள்ள பேச்சுவாா்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.நிரந்தர போா் நிறுத்தம், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகள்,



ஆயிரக்கணக்கான தலிபான்களும், அரசு ஆதரவு சிறு படைக் குழுக்களும் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்தப் பேச்சுவாா்த்தையில் இடம் பெறவுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தாரில் பல மாதங்களாக தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்தது.



ஆப்கன் அரசு அமெரிக்காவின் கைப்பாவை என்று தலிபான்கள் கருதியதால், அரசுடன் நேரடி பேச்சுவாா்த்தை நடத்த அவா்கள் மறுத்து வந்தனா். அதனால், அவா்களுடன் அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா்.



ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறவும், அதற்குப் பதிலாக பயங்கரவாதத் தாக்குதல்களை தலிபான்கள் கைவிடவும் நடைபெற்ற அந்தப் பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.எனினும்,



ஆப்கன் அரசு மற்றும் அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கும், தலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதுதான் ஆப்கன் உள்நாட்டுப் போரை உண்மையிலேயே முடிவுக்குக் கொண்டு வரும் என்று கூறப்படும் நிலையில், அதற்கான பேச்சுவாா்த்தை தற்போது தொடங்கியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை