Skip to main content

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வன்முறை ஏவப்படாது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்

Sep 10, 2020 275 views Posted By : YarlSri TV
Image

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வன்முறை ஏவப்படாது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் 

அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வன்முறை ஏவப்படாது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் மீண்டும் தெரிவித்துள்ளார்.



தாய்லாந்து அரசுக்கு எதிராக செப்டம்பர் 19-ஆம் தேதி கண்டனப் பேரணியில் ஈடுபட மாணவரள் முடிவு செய்திருந்த நிலையில், இதனை அவர் அறிவித்துள்ளார்.



இது குறித்து பேசிய தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான், போராட்டக்காரர்களை கையாளுவது குறித்து ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பேசியதாகக் கூறினார்.



போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் எனது குழந்தைகளைப் போன்றவர்கள். அதனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வன்முறையோடு கையாளக் கூடாது என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.



கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் மாணவர்கள் அரசுக்கு எதிராக கண்டனப் பேரணியில் ஈடுபட உள்ளனர்.



தாய்லாந்தில் முடியாட்சியை எதிர்த்தும், எதிர்க்கட்சிகளின் மீதான அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 



கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் இராணுவத் தலைவரான பிரயுத் சான் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை