Skip to main content

அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு!

Sep 10, 2020 301 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு! 

வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவில் அதிக அளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.



இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.



கரோனாவால் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனிடையே அமெரிக்க குழந்தைகள் மருத்துவமனை சங்கம் வெளியிட்டுள்ள தகவலில், மொத்த பாதிப்பில் 9.8 சதவிகித குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்த பாதிப்பில் 5,13,415  குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



அமெரிக்காவில் ஒருலட்சம் கரோனா பாதிப்பில் 680 குழந்தைகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 70,630 குழந்தைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 16 சதவிகிதம் அதிகமாகும்.



மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 0.7 முதல் 3.7 சதவிகிதமாக உள்ளது. தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவது குறைவாகவே இருந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து கண்டறிவதற்காக பரிசோதனை, கண்காணிப்பு, இறப்பு உள்ளிட்டவை வயது வாரியாக கணக்கெடுக்கப்படுகிறது.



அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 63,59,313-ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,90,796-ஆக உயர்ந்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை