Skip to main content

ஜெய்சங்கர் இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்!

Sep 10, 2020 279 views Posted By : YarlSri TV
Image

ஜெய்சங்கர் இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்! 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.



ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செப்டம்பர் 8-ஆம் தேதி ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றார்.



நேற்று (புதன்கிழமை) கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், பிராந்திய ஒற்றுமை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இதனிடையே இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யையும் சந்தித்து பேச உள்ளார். இந்தியா - சீனா நாடுகளிக்கு இடையே லடாக் எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு சந்தித்து பேச உள்ளனர்.



கிழக்கு லடாக் பகுதியில் கடந்த திங்கள் கிழமை சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை சீன ராணுவம் மறுத்து வந்த நிலையில் ஆதாரத்துடன் இந்திய ராணுவம் அதனை நிரூபித்தது. மேலும் பயங்கர ஆயுதங்களை தாங்கியவாறு சீன ராணுவத்தினர் எல்லையில் இருந்த புகைப்படமும் வெளியானது.



இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாலை 6 மணிக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.



கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்களுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை