Skip to main content

24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,209 பேர் உயிரிழப்பு!

Sep 10, 2020 258 views Posted By : YarlSri TV
Image

24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,209 பேர் உயிரிழப்பு! 

24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,209 பேர் உயிரிழந்தனர். இதனால் நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1 லட்சத்து 95 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது



இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:



அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,244 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,49,475-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,209 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,95,239 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு 25,08,141 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுவரை 38,46,095 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர், 



நாட்டிலேயே அதிகபட்சமாக கலிஃபோா்னியா மாகாணத்தில் 7,47,991 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 13,990 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெக்ஸாஸில் 6,77,890 பேரும், புளோரிடாவில் 6,52,148 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பலி எண்ணிக்கையை பொறுத்தவரை நியூயார்க் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. 33,105 பேர் உயிரிழந்துள்ளனர், 4,74,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை