Skip to main content

முதல் பெண் அதிபரானால் அது நாட்டிற்கே ஏற்படும் அவமானம் - ட்ரம்ப்

Sep 09, 2020 216 views Posted By : YarlSri TV
Image

முதல் பெண் அதிபரானால் அது நாட்டிற்கே ஏற்படும் அவமானம் - ட்ரம்ப்  

கமலா ஹாரீஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபரானால் அது நாட்டிற்கே ஏற்படும் அவமானம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



இந்தத் தேர்தலில் அதிபர் ரேஸில் ட்ரம்ப்-பும் ஜோ பைடனும் இருக்க, துணை அதிபர் போட்டியில் இந்திய வம்சாவளிப் பெண்மணியான கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றால், அமெரிக்க வரலாற்றில், `முதல் பெண் துணை அதிபர்’ என்ற மகத்தான சாதனையைப் பெற்றவராவார்.



மேலும், `முதல் இந்திய வம்சாவளிப் பெண் துணை அதிபர்’ என்ற சாதனையையும் பதிவு செய்வார். இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப், கமலா ஹாரிஸைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.



தேர்தலையொட்டி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டிரம்ப், வடக்கு கரோலினாவில் ஆதரவாளர்கள் இடையே உரை நிகழ்த்திய போது, கமலா ஹாரீஸால் ஒருபோதும் அமெரிக்க அதிபர் ஆகி விட முடியாது என்று கூறியுள்ளார்.



மேலும் அவர் பேசுகையில், 'கமலா ஹாரீஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது. அமெரிக்க மக்கள் அவரை விரும்பவில்லை.அவர் ஒருபோதும் முதல் பெண் அமெரிக்க அதிபர் ஆகிவிட முடியாது.நிச்சயமாக வர முடியாது. அது நம் நாட்டிற்கு அவமானமான ஒன்று,' என்றார். அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு கிடைத்து விடும் என்று மக்களுக்கு கிடைத்துள்ள செய்திகள் எதிர்கட்சியினரை பதற்றம் அடைய செய்துள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.



இந்த நிலையில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் அவர்களும் அமெரிக்கா முழுவதும் பயணித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை