Skip to main content

தொழில் துறைகளை மேம்படுத்துவது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவது தொடர்பில் அங்கஜன் ராமநாதன் அச்சுவேலிக்கு விஜயம்!

Sep 05, 2020 216 views Posted By : YarlSri TV
Image

தொழில் துறைகளை மேம்படுத்துவது இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவது தொடர்பில் அங்கஜன் ராமநாதன் அச்சுவேலிக்கு விஜயம்! 

தொழில் துறைகளை மேம்படுத்துவது மற்றும் அதனுடன் இணைந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி குழுக்களின் தலைவருமான அங்கஜன் ராமநாதன் இன்றைய தினம் அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள கைத்தொழிற் பேட்டை விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.



இந்த விஜயத்தின்போது மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் காணி-சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோரும் வந்திருந்தனர்.



அவை விருத்தி அதிகாரசபையின் நோக்கம் யாழ் மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் பேட்டைகளை விருத்தி செய்து அதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவது. அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் குறைபாடுகள் காணப்படுவதாக முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.



இதனடிப்படையில் அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக என்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கைத்தொழிற் பேட்டை பிஜிஎம் செய்து குறைபாடுகளை அறிந்து கொண்டு அவற்றை எதிர்காலத்தில் எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.அதேபோல் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் பல்வேறு காணிகள் இன்னும் காணப்படுகின்றன ஆகவே முதலீட்டாளர்கள் இங்கு வந்து தங்களுடைய முதலீடுகளை செய்து கொள்ள முடியும்.



வெளிநாட்டில் வசிக்கும் தாயக உறவுகளின் இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ள முடியும் இதன் ஊடாக வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினையும் பெற்றுக்கொடுக்க முடியும்.



அதேபோல் தென்பகுதியிலிருந்து இங்கே முதலீடு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. ஆனால் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் வசதிகள் பற்றாக்குறையாக காணப்படுகின்றன.



எங்களுடைய தேவைகள் முழுமையான அளவில் தீர்க்கப்படாத காரணத்தினால் தென் பகுதியிலேயே நாங்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.



ஆகவே இங்குள்ள கைத்தொழில் பேட்டைகளை மேலும் விருத்தி செய்வதன் மூலம் பல்வேறு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.இது தரப்பில் கௌரவ அமைச்சர் விமல் வீரவன்ஸ அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் பொருட்டு இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வது விரைவில் நாங்கள் பேச இருக்கிறோம்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை