Skip to main content

ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - விஜயகாந்த் வேண்டுகோள்

Sep 07, 2020 336 views Posted By : YarlSri TV
Image

ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - விஜயகாந்த் வேண்டுகோள் 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் திறன்கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டவேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.



பகுதி நேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது.



இதற்காக மாதம் ரூபாய் 5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்தார். பகுதி நேரமாக இருந்தாலும் கூட, ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகாவது தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து பத்து ஆண்டுகள் ஆகியும் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.



மேலும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆண்டுக்கு ஒருமுறை போராட்டம் நடத்துவதும், அந்த நேரத்தில் பேச்சு நடத்தும் அதிகாரிகள், உங்கள் கோரிக்கைகளை ஆய்வு செய்கிறோம் என வாக்குறுதி அளிப்பதும் வாடிக்கையாகி விட்டன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை