Skip to main content

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவராக இளையவர் ஒருவர் வர வேண்டும்!

Sep 07, 2020 298 views Posted By : YarlSri TV
Image

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவராக இளையவர் ஒருவர் வர வேண்டும்! 

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவராக இளையவர் ஒருவர் வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தான் தயார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். 



இது குறித்து ரணில் இவ்வாரம் நிச்சயம் முடிவு எடுப்பார் என நம்புவதாக அவர் கூறியுள்ளார். 



தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்ல வேண்டிய தேவை தனக்கு இல்லை என தெரிவித்துள்ள ருவான் விஜேவர்த்தன, மக்களின் வாக்குகள் மூலமே பாராளுமன்றம் செல்ல விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். 



ஐக்கிய தேசியக் கட்சியின் 74வது ஆண்டு நிறைவு நிகழ்வின் பின் ஊடாகங்களுக்கு கருத்து வௌியிட்டபோதே ருவான் விஜேவர்த்தன இவ்வாறு கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை