Skip to main content

ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி!

Sep 02, 2020 228 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி! 

ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 3 தளபதிகள் உட்பட 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு இராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆப்கானிஸ்தானின் வடக்கு பார்யப் மாகாணத்தில் இன்று போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் தலிபானின் மூன்று தளபதிகள் உட்பட மொத்தம் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு பிராந்தியத்தின் இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹனிப் ரெசாய் தெரிவித்துள்ளார்.



இராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலை வைத்து பார்யப் மாகாணத்தின் கொய்சர்  மற்றும் கவாஜா  மாவட்டங்களில் அதிகாலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதிகளான முல்லா சாதிக், முல்லா பஷீர் மற்றும் பைசுல்லா ஆகியோர் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர், அத்துடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.



கொய்சர்  மற்றும் கவாஜா  மாவட்டங்களில் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்க திட்டங்களைத் தீட்டுவதற்காக தலிபான் பயங்கரவாதிகள் கூடியிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹனிப் ரெசாய் வித்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

17 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

17 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

17 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

17 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

17 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

17 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை