Skip to main content

இந்தியா - சீனா இடையிலான எல்லைத் தொடர்பான பதற்றம் சுமூகமாக தீர்க்கப்படும் என நம்புகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

Sep 02, 2020 265 views Posted By : YarlSri TV
Image

இந்தியா - சீனா இடையிலான எல்லைத் தொடர்பான பதற்றம் சுமூகமாக தீர்க்கப்படும் என நம்புகிறோம் - அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 

இந்தியா மற்றும் சீனா படைகள் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.



இதையடுத்து எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. இருதரப்பும் படைகளை குவிக்கத் தொடங்கின. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படைகளை விலக்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் எல்லையில் அமைதி திரும்பத் தொடங்கியது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.



இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



29-ம்தேதி நள்ளிரவில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எல்லையில் நிலைமையை மாற்ற ஆத்திரமூட்டும் செயல்களை மேற்கொண்டதாகவும் இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் தெரிவித்தார்.



மேலும், இந்திய வீரர்கள் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை முன்கூட்டியே நிறுத்தி, நமது நிலைகளை வலுப்படுத்தவும், சீன படைகளின் நோக்கங்களை முறியடிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கர்னல் அமான் ஆனந்த் கூறினார்.



இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்த நிலையிலும், சீனா அத்துமீறியதாக கூறப்படுகிறது.



இதனால் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா - சீனா இடையில் எல்லையில் நிலவி வரும் பதற்றமான நிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என நம்புகிறோம் என்ற அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.



மேலும், கடந்த வருடம் மேற்கத்திய நாடுகள் சோதனையை செய்ததை விட சீனா அதிகமான ஏவுகணை சோதனைகள் செய்துள்ளது. தைவான் ஜலசந்தி முதல் இமயமலை வரை சீனா அண்டை நாடுகளுடன் விரோத போக்கை கடைபிடித்து வருவது தெளிவாக தெரிகிறது. தென்சீனக் கடலிலும் இது தெளிவாக தெரிகிறது என்றார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை