Skip to main content

முப்படையினருருக்கும் ஆசி வேண்டி யாழில் இருந்து காலி க்கு நடைபயணம்

Sep 02, 2020 300 views Posted By : YarlSri TV
Image

முப்படையினருருக்கும் ஆசி வேண்டி யாழில் இருந்து காலி க்கு நடைபயணம் 

முப்படையினருருக்கும்  ஆசி வேண்டி யாழில் இருந்து காலி க்கு நடைபயணம் 



தென்னிலங்கை காலி மாவட்டம் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பாலகுமார என்ற நபர் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து காலிக்கு தனது பாதயாத்திரையை



ஆரம்பித்தார். 



கடந்த மாதம் 8ம் திகதி காலை யாழ்ப்பாணத்துக்கான பாதயாத்திரையின் ஆரம்பித்த அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். 



யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மீகா ஜந்துரஸ்ரீ விமலரத்ன தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார். இன்று காலை அவர் தனது பாதயாத்திரையினை காலிக்கு ஆரம்பித்தார். இந்த பாதயாத்திரையின் ஆரம்ப நிகழ்வில் 51வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டெலிட் ரத்னாயக்க கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக இலங்கை கொடியினை வழங்கி பாதயாத்திரை ஆரம்பித்து வைத்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்றிலிருந்து இலங்கை முழுமையாக விடுபட வேண்டும் என்றும், நாட்டில் சாந்தி சமாதானம் ஏற்பட வேண்டும்,முப்படையினருக்கான ஆசீர்வாதங்கள் கிடைக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பாதயாத்திரை யினை ஆரம்பித்தார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை