Skip to main content

இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனம் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது - காங்கிரஸ் கட்சி மீண்டும் கடிதம்

Aug 30, 2020 224 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனம் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது - காங்கிரஸ் கட்சி மீண்டும் கடிதம் 

இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனம் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. வர்த்தக காரணங்களை கணக்கில் கொண்டு பாஜக-வினரின் வெறுப்பு பேச்சுக்களையும், வன்முறையை தூண்டும் பதிவுகளையும் தடுக்க முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுப்பதில்லை என அமெரிக்காவை சேர்ந்த வால்ஸ்டிரேட் என்ற பத்திரிக்கை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.



இதனை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு கேசி வேணுகோபால், முகநூல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸக்கா்பொ்குக்கு கடந்த 17ம் தேதி கடிதம் ஒன்றினை எழுதினார். அதில், இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனம் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி அதன் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு அளிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதே குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி கூடுதல் ஆதாரங்களுடன் அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் கடந்த 27ம் தேதி செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.



தற்போது இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு. கே.சி. வேணுகோபால், முகநூல் நிறுவன தலைமை செயல் அதிகாரி மாா்க் ஸக்கா்பொ்குக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவன குழுவினர் மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அக்கடிதத்தில் கே.சி. வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை