Skip to main content

அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார் - டெல்லி எய்ம்ஸ் அறிக்கை!

Aug 30, 2020 258 views Posted By : YarlSri TV
Image

அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார் - டெல்லி எய்ம்ஸ் அறிக்கை! 

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆகஸ்ட் 2 அன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



ஆகஸ்ட் 14-ஆம் தேதி அவருக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.



கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா குணமடைந்து விட்டதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை