Skip to main content

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே சமாதான ஒப்பந்தத்தின் மூலம் முடிவு வந்தது!

Aug 30, 2020 266 views Posted By : YarlSri TV
Image

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே சமாதான ஒப்பந்தத்தின் மூலம் முடிவு வந்தது! 

1948ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு எகிப்து, ஜோர்தான், லெபனான், ஈராக், சிரியா 



ஆகிய மத்திய கிழக்கு நாடுகளும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.



இதனால் மேற்கூறிய நாடுகள் இஸ்ரேலுடன் தூதரகம், வர்த்தகம் என எந்த விதமான உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 



மேலும் தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை அந் நாடுகள் புறக்கணித்து வந்தன. எனினும் 1979ம் ஆண்டு எகிப்தும், 1994ம் ஆண்டு ஜோர்தானும் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன் மூலம் அவ்விரு நாடுகளும் இஸ்ரேலுடன் தூதரகம் உள்ளிட்ட உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன.



இதனிடையே இஸ்ரேலுடன் நெருங்கிய நட்புறவை கடைப்பிடித்து வரும் அமெரிக்கா இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் பலனாக இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே கடந்த 13ம் திகதி வரலாற்று  சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.



இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திகழ்கிறது. இதற்கு துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளின் உறவை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரு நாட்டுக்கும் இடையிலான தொலைபேசி சேவை கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கியது.



இரு நாடுகளிலும் பரஸ்பர தூதரக அலுவலகங்களை அமைப்பது, தூதரக அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்டவை குறித்து இரு தரப்புக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலை புறக்கணிப்பதை முறைப்படி முடிவுக்கு கொண்டுவரும் உத்தரவை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மன்னர் ஷேக் கலிபா பின் சயீத் அல் நஹ்யான் நேற்று பிறப்பித்தார். இது இரு நாடுகளின் உறவை பலப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.



இந்த புதிய உத்தரவை இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. குறிப்பாக வைரம் , மருந்து மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். மேலும் இந்த உத்தரவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்கள் இஸ்ரேலிய பொருட்களை வாங்குவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் அனுமதிக்கிறது. அத்துடன் விமானப் போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி போன்ற பிற கூட்டு நிறுவனங்களின் வாய்ப்பை விரிவுபடுத்துகிறது.



இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசாங்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-



அரசாங்கத்தின் இந்த புதிய உத்தரவை இஸ்ரேலுடன் தூதரக மற்றும் வணிக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முயற்சிகளுக்குள் வருகிறது. இது கூட்டு ஒத்துழைப்பை தொடங்குவதற்கான ஒரு பாதையை உருவாக்கிறது. இது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலமும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும் இருதரப்பு உறவுகளுக்கு வழிவகுக்கிறது” என கூறப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை