அமெரிக்க ராணுவ டாங்கி மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி!
Sep 01, 2020 272 views Posted By : YarlSri TV
அமெரிக்க ராணுவ டாங்கி மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி!
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலை எதிர்கொள்ள தென் கொரியாவுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்து வருகிறது.
அதன்படி வடகொரியாவின் தாக்குதலை சமாளிப்பதற்காக அமெரிக்க வீரர்கள் சுமார் 28 ஆயிரம் பேர் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே வடகொரியாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் தென்கொரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள கியோங்கி மாகாணம் போச்சியான் நகரில் அமெரிக்க படைகள் போர்ப் பயிற்சி முடித்துவிட்டு ராணுவ முகாமுக்கு திரும்பி கொண்டிருந்தன.
ரோட்ரிக்ஸ் லைவ் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவத்தின் சிறிய ராணுவ டாங்கி மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியது.
இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கி முற்றிலுமாக உருக்குலைந்து போனது. இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ராணுவ டாங்கியில் இருந்த அமெரிக்க வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்கான காரணம் குறித்து தென்கொரியா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
21 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
21 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
21 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
21 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
21 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
21 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago