Skip to main content

நாளை முதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்திருப்பதால் பேருந்துளை பழுது பார்க்கும் பணி மும்முரம்!

Aug 31, 2020 298 views Posted By : YarlSri TV
Image

நாளை முதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்திருப்பதால் பேருந்துளை பழுது பார்க்கும் பணி மும்முரம்! 

நாளை முதல் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்திருப் பதால் கடந்த 5 மாதங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பேருந்துகளில் ஏற்பட் டுள்ள பழுதுகளை நீக்கும் பணி யில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.



தமிழகத்தில் கரோனா ஊரடங் கால் மார்ச் 22 முதல் பேருந்து களை இயக்க அரசு தடை விதித்தது. ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால் ஜூன் 1 முதல் 50 சதவீத பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. சமூக இடைவெளி மற்றும் 60 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகள் மூலம் கரோனா பரவுவது அதிகரித்ததாகக் கூறி பேருந்துகளை இயக்க அரசு மீண்டும் தடை விதித்தது.



தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், விழுப்புரம், கோவை, மதுரை, சேலம், நெல்லை கோட்டங்கள், மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன. மதுரை கோட்டத்துக்குட்பட்ட மதுரை மண்டலத்தில் 951, விருதுநகர் மண்டலத்தில் 418, திண்டுக்கல் மண்டலத்தில் 898 என மொத்தம் 2,167 பேருந்துகள் உள்ளன. இதில் 881 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன.



சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பேருந்துகளில் பழுது நீக்கும் தொழிலாளர்கள். (வலது) எல்லிஸ் நகர் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இயக்குவதற்கு தயாராக உள்ள பேருந்துகள். இந்த பேருந்துகள் 5 மாதங் களாக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 50 சத வீதத்துக்கும் அதிகமான பேருந்து கள் போக்குவரத்துக் கழகத் தில் சேர்க்கப்பட்டு 5 முதல் 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பெரும்பாலான பேருந்துகள் சேதமாகி பழுதடைந்த நிலை யிலேயே இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மாதக்கணக்கில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதால் மேலும் சேத மடைந்து வருகின்றன.



இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க அரசு அனு மதி அளித்துள்ளது. அனைத்து பேருந்துகளை தயார்படுத்தி நாளைக் குள் இயக்கத்துக்கு கொண்டு வருவதில் சிக்கல் எழுந் துள்ளது.



இது குறித்து பராமரிப்பு பிரிவு ஊழியர்கள் கூறியதாவது:



அரசு போக்குவரத்துக் கழகத் தின் அனைத்துப் பணிமனையிலும் கடந்த ஒரு வாரமாகவே பேருந்துகளை தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பேருந்துகளை ஸ்டார்ட் செய்து பணிமனைக்குள்ளாகவே இயக்கு வது, டயர்களில் காற்று நிரப்புவது, பிற பழுதுகளை நீக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டோம். தற்போது நாளை இயக்க அனுமதி அளித்துள்ளதால் பேருந்துகளை தயார்படுத்தி வருகிறோம் என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை