Skip to main content

JEE, NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐஐடி மும்பை, வலைதள பக்கத்தை உருவாக்கியுள்ளது!

Aug 31, 2020 251 views Posted By : YarlSri TV
Image

JEE, NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐஐடி மும்பை, வலைதள பக்கத்தை உருவாக்கியுள்ளது! 

JEE, NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஐஐடி மும்பை, வலைதள பக்கத்தை உருவாக்கியுள்ளது.



கொரோனா பாதிப்புக்கு மத்தியில் JEE முதன்மை தேர்வு வரும் 1 முதல் 6ம் தேதி வரையிலும், நீட் தேர்வு வரும் 13ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கான போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்ய அரசு மட்டுமல்லாமல் தன்னார்வலர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் ஐஐடி மும்பையை சேர்ந்த ஐந்து மாணவர்கள் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு வலைதள பக்கத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தங்கள் இருப்பிடத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்கான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய முடியும்.



Eduride என்ற இந்த போர்ட்டலில் மாணவர்கள் வசிக்கும் இடம், தேர்வு மையம் உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். மாணவர்களுக்காக வாகனம் ஓட்ட தயாராக உள்ள அல்லது ஏற்பாடு செய்ய தயாராக உள்ள தன்னார்வலர்களுடன் இந்த போர்ட்டல் மாணவர்களை இணைக்கும். இந்த தன்னார்வலர்கள் அனைவரும் ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் அல்லது ஏற்கெனவே படித்து முடித்த மாணவர்கள். தேர்வு எழுதுபவர்களின் இருப்பிடத்தை பொறுத்து அதே பகுதியை சேர்ந்த தன்னார்வலருடன் அவரை இணைத்து தேவையான உதவி செய்கின்றனர்.



இதேபோல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ பலரும் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தேர்வு நெருங்கிவிட்டதால் அனைத்து மாணவர்களின் கோரிக்கையையும் உடனடியாக செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை