Skip to main content

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் கேபி அன்பழகன்

Aug 30, 2020 276 views Posted By : YarlSri TV
Image

இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் கேபி அன்பழகன் 

தமிழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் பாஸ் செய்யப்படுவதாகவும் சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்தார். இதனை அடுத்து முதல்வருக்கு கட்-அவுட் வைத்தும் போஸ்டர் ஒட்டியும் மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது



இந்த நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யுஜிசியின் அறிவுரைப்படி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளை விரைவில் நடத்த அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்



மேலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் துணை வேந்தர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் அரசின் முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் கூறினார்



 



புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் 'இது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்வதாகவும் அதன் பின்னரே ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை