Skip to main content

திறமையை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்திய இளம் ஹீரோயின்!!!

Aug 26, 2020 301 views Posted By : YarlSri TV
Image

திறமையை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்திய இளம் ஹீரோயின்!!! 

தமிழில் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான ‘காதலில் சொத்தப்புவது எப்படி, தீயா வேலைசெய்யணும் குமாரு' ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்த நடிகை தான் ஐஸ்வர்யா மேனன்.



இவர் கிருஷ்ணாவின் ‘வீரா' படத்தில் ஹீரோயினாக நடித்தார், அதன் பிறகு மிர்ச்சி சிவாவின் ‘தமிழ்ப்படம் 2' வில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு அண்மையில் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  



தற்போது லாக் டவுன் காலத்தில் வீட்டில் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற விஷயங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் மேனன் தனது சமூக வலைத்தளங்களில் படு ஆக்ட்டிவாக உள்ளார்.



வசீகரமான போட்டோஷூட்கள், தனது செல்ல நாயுடன் பதிவுகள், ஒர்க்அவுட் வீடியோக்களைப் பகிர்வதிலிருந்து, ஈஸ்வர்யா சுவாரசியமான பதிகளுடன் தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்திகிறார்.



நேற்று அவர் தனது புதிய திறமை வெளிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருந்தார். சூர்யா ஜோதிகா நடித்த காக்க காக்க படத்திலிருந்து ‘என்னைக் கொஞம் மாற்றி' எனும் பிரபலமான பாடலை பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் சற்று நேரத்தில் வைரலானது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை