Skip to main content

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்து செயல்படும் தலா 5 எம்பி.க்கள் கொண்ட இரு குழுக்களை அமைத்து காங்கிரஸ் அறிவித்துள்ளது!

Aug 28, 2020 276 views Posted By : YarlSri TV
Image

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்து செயல்படும் தலா 5 எம்பி.க்கள் கொண்ட இரு குழுக்களை அமைத்து காங்கிரஸ் அறிவித்துள்ளது! 

காங்கிர காரிய கமிட்டி கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்து செயல்படும் தலா 5 எம்பி.க்கள் கொண்ட இரு குழுக்களை அமைத்து காங்கிரஸ் அறிவித்துள்ளது.



காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், சோனியா காந்தி இடைக் கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்று கடந்த 10-ந் தேதியுடன் ஓராண்டு ஆகிறது.



சோனியா காந்தியே தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு பிரிவினர் கூறி வரும் நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பலர் சமீப காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.



இந்த நிலையில், காங்கிரசுக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் சமீபத்தில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். இந்த கடிதத்தில் குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.



பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 23 காங்கிரஸ் தலைவர்கள் இடைக்கால கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம், சீர்திருத்தங்கள், நியாயமான உள் தேர்தல்கள், கூட்டு முடிவெடுப்பது மற்றும் "முழுநேர, புலப்படும் தலைமை" என்று அழைப்பு விடுத்து இருந்தது.



இதுகுறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. காரிய கமிட்டி கூட்டத்திற்கு  சில நாட்களுக்குப் பிறகு, சோனியா காந்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அதிருப்தியாளர்களுக்கு ஒரு தகவலை வழங்கி உள்ளார்.



நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கில் தலா 5 எம்பி.க்கள் கொண்ட இரு குழுக்களை அமைத்து காங்கிரஸ் அறிவித்துள்ளது.



காரிய கமிட்டிக் குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களவைக் குழுத் தலைவராக குலாம் நபி ஆசாத் நீடிப்பார்.



ஜெய்ராம் ரமேஷ், அகமது படேல், கே.சி. வேணுகோபால், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.



மக்களவைக் குழுத் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி நீடிக்க, கே.சுரேஷ், கவுரவ் கோகாய், ரவநீத் பிட்டு, மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக இந்த குழுக்கள் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை