Skip to main content

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் - சி.யமுனாநந்தா

Aug 22, 2020 258 views Posted By : YarlSri TV
Image

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் - சி.யமுனாநந்தா 

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என  யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்



வடக்கில்  காணப்படுகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறை நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது பிரதி பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்



வடபகுதியில் வைத்தியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அண்மைக்காலங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலே நடாத்தப்பட்டிருக்கின்றது



இது குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்கள் அங்கு கடமைக்குஅனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது ஆனால் யாழ் போதனா வைத்திய சாலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகின்றார்கள் குறிப்பாக குழந்தை மருத்துவம் உட்பட சிறு குழந்தைகளுக்கு உரிய சிறப்பு மருத்துவர்கள் ,  இதய சிகிச்சைக்குரிய மருத்துவர்கள் , சிறுநீரக சிகிச்சை   நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள் தற்போது மருத்துவத் துறை நன்கு   விருத்தியடைந்து ள்ளது 



ஒவ்வொரு மருத்துவ நிபுணருக்கும் குறைந்தது மூன்று மருத்துவர்கள் பணியாற்றினால்  மாத்திரமே அந்த பிரிவினை சிறப்பாக செயற்படுத்த முடியும் 



யாழ் போதனா வைத்தியசாலையானது மிகவும் அசுர வேகத்தில்  வளர்ச்சி அடைந்து வருகின்றது தற்போதுள்ள பணிப்பாளரின் அயராத முயற்சியின் காரணமாக அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது 



இதனால் மருத்துவ படிப்பு மட்டுமல்ல மருத்துவபடிப்பின்  பின் பட்டப்படிப்பு அதேபோல தாதிய பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில்  யாழ் போதனா வைத்தியசாலை விருத்தியடைந்து வருகின்றது 



யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றும் போது சில சேவைகள் இடைநிறுத்த படக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது 



இந்த பிரச்சினைக்கு  தீர்வுகாண வேண்டுமேயானால் புதிதாக பல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது குறிப்பாக யாழ் மாவட்டத்தில்  தனியார் மருத்துவ பீடம் ஒன்றை உருவாக்கும் பட்சத்தில் இந்த குறைபாட்டை நீக்கலாம் 



ஏனென்றால் இன்று மருத்துவம் உலகளாவிய ரீதியில் அதிகளவில் விருத்தியடைந்து காணப்படுகின்றது ஒவ்வொரு துறையிலும் பல மருத்துவர்கள் உள்ளார்கள் அவர்களின் கீழ் பணி புரிவதற்கும் பல மருத்துவர்கள் தேவை அதே போல் மருத்துவ நிபுணர்கள் இளைப்பாறும் போது புதிய மருத்துவ நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவே  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க போராட்டங்களை கைவிட்டு புதிதாக  மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபடவேண்டும் அரசாங்கத்திடம் போதியளவு  பணம் இல்லாத படியினால் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே இந்த காலகட்டத்தில் தேவையாக உள்ளது என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை