Skip to main content

தேவைக்கேற்ப இரண்டாவது தலைநகர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார்!

Aug 24, 2020 259 views Posted By : YarlSri TV
Image

தேவைக்கேற்ப இரண்டாவது தலைநகர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார்! 

சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோவில் தெருவில் புதிதாக வாங்கப்பட்ட கழிவு நீர் அகற்றும் வாகனம் மூலமாக கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்றும் பணிகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆய்வு செய்தார்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ‘மழைக் காலங்களில் கழிவு நீர் கால்வாயில் ஏற்படும் அடைப்புகளை எடுக்க நவீன கழிவு நீர் அடைப்பு நீக்கம் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. கால்வாயில் அடைப்புகளை நீக்கும் 3 பயன்பாடுகள் இந்த ஒரு வாகனத்தில் உள்ளது. மழை காலங்களில் மழைநீர் கால்வாய் அடைப்பு இல்லாமல் இருந்தால் சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும்.



சென்னையில் 2,236 கிலோ மீட்டர் தொலைவிற்கு மழைநீர் கால்வாய் உள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 138 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் கால்வாய் உள்ளது. 



சக்சன், ஜெட்ராடிங், ரிசைக்கிளிங் போன்ற 3 பணிகளை ஒரே வாகனத்தை வைத்து செய்யும் வசதிக்காக இந்த வாகனம் 5.19 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு இதுபோல் 7 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரத்தின் பயன்பாட்டால் மனிதர்கள் கால்வாயில் இறங்கி பணியாற்றும் நிலை இனி இருக்காது. காலத்தின் தேவைக்கேற்ப 2 வது தலைநகரம் குறித்து முடிவெடுக்கப்படும்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை