Skip to main content

இந்திய பெண்ணாக நடித்த டாப்ஸி பன்னு, தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார்!

Aug 24, 2020 301 views Posted By : YarlSri TV
Image

இந்திய பெண்ணாக நடித்த டாப்ஸி பன்னு, தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார்! 

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘ஆடுகளம்' படத்தில் மதுரையில் வாழும் ஆங்கிலோ-இந்திய பெண்ணாக நடித்த டாப்ஸி பன்னு, தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார். தனுஷுடனான அவரது காதல் காட்சிகள் இன்னும் இளம் பார்வையாளர்களிடையே மிகவும் கவர்ந்ததாக இருக்கின்றன. அதனையடுத்து, பல தமிழ் திரைப்படங்களில் நடித்தாலும், தற்போது பாலிவுட்டில் அவருக்கு தனி அந்தஸ்த்து கிடைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.



தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தொடர்ந்து படங்களைக் கொடுத்துவரும் டாப்ஸி, இப்போது தனது வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணித்து வந்துள்ளார். பல முன்னணி நடிகைகளுக்கு இடையில் இவர் தனித்துவமாக காணப்படுகிறார். காஞ்சனா 2 படத்திற்கு பிறகு இவர் முழுநீள கதாபாத்திரம் ஏற்று தற்போதுவரை தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. இருப்பினும் ஜனகனமான என்ற தமிழ் படத்தில் நடிக்க தற்போது இவர் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



இந்நிலையில் பாலிவுட் உலகத்தில் படு பிசியாக இருக்கும் டாப்சீ இந்த ஊரடங்கு காலத்தில் பிற நடிகர் நடிகைகளை போல வீட்டில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார். தற்போது பாலிவுட் உலகில் படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் டாப்சீ அவர்களின் ராஷ்மி ராக்கெட் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்து பெண்ணாக ஓட்டப்பந்தய வீராங்கனையாக அவர் இந்த படத்தில் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை