Skip to main content

அசத்தல் போட்டோஷூட் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!

Aug 24, 2020 368 views Posted By : YarlSri TV
Image

அசத்தல் போட்டோஷூட் வெளியிட்ட சாக்ஷி அகர்வால்! 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு அதன் பிறகு சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகர் நடிகைகள் பலர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் “காதலும் கடந்து போகும்”, “காலா", “விஸ்வாசம்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் சாக்ஷி அகர்வால். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளும் சிக்கி போட்டியிலிருந்து வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேறினார்.  

 

பிக்பாஸ் போட்டிக்கு பிறகு இவர் தற்போது சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்து வருகிறார். படவாய்ப்புகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்க, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 



இந்த ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் நேரத்தை செலவிட்டு வரும் சாக்ஷி அகர்வால் பல அசத்தலான போட்டோஷூட்களை வெளியிட்டு அசத்தி வருகின்றார். அதே சமயம் பல ஒர்க் அவுட் வீடியோ-க்களையும் வெளியிட்டு கலக்கி வருகின்றார்.



இந்நிலையில் தற்போது "haters பற்றி கவலை இல்லை" என்ற தலைப்பில் ஒரு அசத்தலான போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை