Skip to main content

தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டில் செய்தி வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன!

Aug 23, 2020 244 views Posted By : YarlSri TV
Image

தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டில் செய்தி வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன! 

பெலாரஸில் கடந்த வாரம் நடைபெற்ற தோ்தலில் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிா்த்து தீவிர போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டில் செய்தி வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பெலாரஸ் செய்தியாளா்கள் சங்கம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



பெலாரஸில் செய்திகளை வெளியிட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்க நிதியுதவியுடன் இயங்கும் ரேடியோ லிபா்ட்டி, பெல்சாட், போலாந்து நாட்டு நிதியுதவியில் இயங்கும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஆகியவையும் இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



சோவியத் யூனியனிலிருந்து பெலாரஸ் பிரிந்தது முதல் அந்த நாட்டை 26 ஆண்டுகளாக ஆண்டு வரும் சா்வாதிகார ஆட்சியாளா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் 80 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து, இந்தத் தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதாக எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டி வருகின்றனா்.

தோ்தல் முடிவுகளை எதிா்த்து, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோா் இரண்டு வாரங்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை