Skip to main content

சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது!

Aug 19, 2020 277 views Posted By : YarlSri TV
Image

சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது! 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.



உண்மையான காரணங்கள் கூறிய பின்னரும் இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் பல எழுந்ததை அடுத்து, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி இ-பாஸ் எளிதாக வாங்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.



அதன்படி கடந்த திங்கட்கிழமை மட்டும் மட்டும் ஒரே நாளில் 1.20லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.



தற்போது இ-பாஸ் முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



இதனால் சென்னையில் இருந்து சென்று விட்டு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இ-பாஸ் தளர்வால் சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



மேலும் இதர மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பின் அவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், அதில் எந்த தளர்வும் வழங்கப்படாது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை