Skip to main content

உணவு பற்றாக்குறை -வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க கிம் ஜாங் உன் உத்தரவு?

Aug 19, 2020 364 views Posted By : YarlSri TV
Image

உணவு பற்றாக்குறை -வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க கிம் ஜாங் உன் உத்தரவு? 

25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.



உணவு பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.



உணவுபற்றாக்குறை குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



அதன்பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய்களை ஒப்படைக்க வேண்டுமென கிம் ஜூலை மாதத்தில் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



இதை தொடர்ந்து அதிகாரிகள் செல்லப் பிராணியான நாய்களை வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து, நாய்களை கொடுக்கும்படி கட்டாயப்படுத்தியும், பலவந்தமாக பறிமுதல் செய்தும் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



பறிமுதல் செய்யப்படும் நாய்களில் சில நாய்கள் அரசு நடத்தும் உயிரியல் பூங்கா அல்லது இறைச்சி உணவகங்களுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை