Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை - தீர்ப்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை விளாசிய நீதிமன்றம்!

Aug 19, 2020 311 views Posted By : YarlSri TV
Image

ஸ்டெர்லைட் ஆலை - தீர்ப்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை விளாசிய நீதிமன்றம்! 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த  815 பக்க தீர்ப்பில் எந்தளவிற்கு ஸ்டெர்லைட் ஆலை செய்த விதிமீறல்களை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோ, அதற்கு சமமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயலற்ற நிலையையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.



அதிர்ர்சியளிக்கும் விஷயமாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் 1995- 2018 ஆண்டுகளில் கணிசமான காலத்திற்கு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது இந்த தீர்ப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.



குறிப்பாக ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை (CTO) இல்லாமலே 16 ஆண்டுகள் 92 நாட்களும் அபாயகரமான கழிவுகளை கையாளும் அனுமதி (HWM) இல்லாமல்  10 ஆண்டுகள் 2 மாதங்கள்  15 நாட்கள் செயல்பட்டு வந்துள்ளதை நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளது.



தொடர்ச்சியாக இல்லாமல் சில முறை மற்றும் அனுமதியைப் பெற்று விட்டு அதை புதுப்பிக்க விண்ணத்தை அளித்து அது நிலுவையில் இருக்கும்போதும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டி சட்டவிரோதமாக ஆலையை இயக்கி வந்தது பெரும் தவறு என்றும் இவை அனைத்தையும் தெரிந்துகொண்டே தெரியாததுபோல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயல்பட்டிருப்பது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் அபாயகரமான கழிவுகளை கையாள அனுமதி இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை மேற்கொண்டபோது அதை கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீது மிகக்கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



மற்றுமொரு முக்கிய குற்றச்சாட்டாக 2015 முதல் 2018 ஆண்டு வரையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் Care Air Centre  எனும் கண்காணிப்பு அமைப்பில் ஸ்டெர்லைட் ஆலையில் காற்று தர குறியீடுகள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதாவது செயல்படாமல் இருந்ததை சுட்டிக் காட்டிய நீதிபதிகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, தொழில்நுட்பக் கோளாறு இருந்திருந்தால் அதை சரிசெய்ய ஏன் முன்வரவில்லை என்று கேள்வியெழுப்பியிருந்தது.



மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய விதிகளின் படி 102.8 மீட்டர் இருக்க வேண்டிய புகைபோக்கி ஸ்டெர்லைட் ஆலையில் 60மீ உயரம் மட்டுமே இருந்ததால் காற்றில் சல்பர் டை ஆக்சைடு அதிகம் கலந்திருக்கக் கூடும். இந்த விதிமீறலை ஏன் மாசு கட்டுப்பாடு வாரியம் கவனிக்கவில்லை என்றும் தீர்ப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை