Skip to main content

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து சிஎன்என் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், டிரம்ப் - பைடன் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது!

Aug 19, 2020 315 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து சிஎன்என் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், டிரம்ப் - பைடன் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது! 

அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.



இந்நிலையில் நாளுக்கு நாள் ஜோ பைடனுக்கான ஆதரவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதற்கு பைடனின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரீஸ் குறித்து அதிகளவில் நேர்மறையான கருத்துகள் நிலவுவது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.



சிஎன்என் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 2003ஆம் ஆண்டுக்கு பின் 53 விழுக்காடு வாக்காளர்கள் நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது.



பல்வேறு பிரிவுகளில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக பைடன், கமலா ஹாரீஸ் அணிக்கு 50 விழுக்காடு ஆதரவு உள்ளதும், டிரம்பின் அணிக்கு 46 விழுக்காடு ஆதரவு உள்ளதும் தெரியவந்துள்ளது.



இருவருக்கும் இடையிலான 4 விழுக்காடு வாக்கு வித்தியாசம் தேர்தல் நெருங்கும் போது எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடுமையான போட்டி நிலவும் 15 மாகாண


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை