Skip to main content

வரலாற்றுப் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோட்சவம் இன்று(18) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது!

Aug 18, 2020 285 views Posted By : YarlSri TV
Image

வரலாற்றுப் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோட்சவம் இன்று(18) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது! 

வரலாற்றுப் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த  தீர்த்தோட்சவம் இன்று(18) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.



விநாயகர், வல்லி தேவசேனா சமேத வேற்பெருமான், சண்டிகேஸ்வரர் சண்முக புஷ்கரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர்.



தீர்த்த கேணியின்  எட்டு திசையிலும் அஷ்ட திக்பாலகர் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டன.



மத்தியில் முருகவேளின் அஸ்திர ராஜருக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ந்து தீர்த்தவாரி கண்டருளச்செய்யப் பெற்றது.



தற்போது நாட்டில் உள்ள கோரோணா தொற்று அச்சத்தின் காரணமாக மட்டுப் படுத்தப் பட்டுள்ள அடியவர்களோடு சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளிபேணி  இன்றைய தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது



நல்லூர் தேவஸ்தானத்தால்இந்நிகழ்வுகள் பக்தர்களின் நலன் கருதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை