Skip to main content

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் எலும்புக்கூடுகள் கானப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன - செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை

Aug 18, 2020 269 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் எலும்புக்கூடுகள் கானப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன - செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை 

யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் எலும்புக்கூடுகள் கானப்பட்ட பகுதிகளில் அகழும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும் அகழும் பணி தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.இது தொடர்பாக நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை சமர்ப்பித்து அகழ்விற்கு அனுமதி எடுத்திருந்தனர்.



இந் நிலையில் இன்று அகழ்வு பணிகள் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில்.



 முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.எனினும் இது தொடர்பில் புகைப்படம் எடுக்கவோ காணொளி செய்திகள் சேகரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அகழ்வு பணி இடத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை