Skip to main content

பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி -பிரேசில் அதிபரின் மனைவி மிச்செல் போல்சனாரோ

Aug 18, 2020 299 views Posted By : YarlSri TV
Image

பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி -பிரேசில் அதிபரின் மனைவி மிச்செல் போல்சனாரோ  

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது.



இருப்பினும் அந்த நாட்டின் அதிபர் ஜெயீர் போல்சனாரோ முழுமையான ஊரடங்கு பிறப்பிப்பதிலும், முக கவசம் அணிவதிலும் நம்பிக்கையில்லாமல் இருந்து வந்தார்.



இதன் காரணமாக அவரும் கொரோனா பிடியில் சிக்கினார். கடந்த மாதம் 7-ந்தேதி அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது



20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 27-ந்தேதி போல்சனாரோ வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்த சில நாட்களிலேயே அவரது மனைவி மிச்செல் போல்சனாரோவுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.



இந்தநிலையில் தான் கொரோனா வைரசிடமிருந்து மீண்டு வந்து விட்டதாக மிச்செல் போல்சனாரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “கொரோனா பரிசோதனையில் எனக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை