Skip to main content

ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் – அக்கிராசன உரையில் ஜனாதிபதி

Aug 20, 2020 351 views Posted By : YarlSri TV
Image

ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்படும் – அக்கிராசன உரையில் ஜனாதிபதி 

ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் கொள்கை விளக்க உரை நிகழ்த்தும் போது இதனை தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறுகையில்,



ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.



மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு பொறுப்புக்களை வகிக்கும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களுக்கான கடமைகளை சரிவர செய்ய வேண்டும்



எம்மால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம்.



19 ஆவது அரசியலமைப்பு நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். புதிய அரசியலமைப்பில் பிரமானமாக தேர்தல் முறைமையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.



அரசியலமைப்பிற்கு அமைய ஒருமித்த நாட்டில் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அரச நிர்வாகம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது பௌத்த மகா சங்கத்தினரின் ஆலோசனை நிச்சயம் பெற்றுக் கொள்ளப்படும்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை