Skip to main content

புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்த்தன 30 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர்!

Aug 20, 2020 229 views Posted By : YarlSri TV
Image

புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்த்தன 30 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர்! 

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்த்தன 30 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டவர்.



ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று (20.08.2020) காலை 9.30 ஆரம்பமாகியது. ஆரம்ப நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.



இதன்போது சபாநாயகர் பதவிக்கு மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.



இந்நிலையில் 9 ஆவது பாராளுமன்றின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.



1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பிறந்த மகிந்த யாப்ப அபேவர்தன (Mahinda Yapa Abeywardena ), இலங்கையின் 30 வருட அரசியல் அனுபவத்தைக்கொண்டவர்.



ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து மாத்தறை மாவட்டத்தின் ஹக்மன தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 1983 ஆம் ஆண்டில் முதன் முறையாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார்.



மஹிந்த யாப்பா அபேவர்தன இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய உடன்படிக்கையை பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.



13 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியிக்குள் இருந்தே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன காணப்பட்டார்.



சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத்தவறிய கட்சியின் விதிமுறைகளை மீறியமைக்காக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கியிருந்தார்.



இதனால் காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத் முதலி தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் அதிருப்தி குழுவுடன் இணைந்து ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் உருவாக்கத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.



ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்.



மஹிந்த யாப்பா அபேயவர்த்தன மாகாண சபை முறைமை 13 ஆவது திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட போது அதனை எதிர்த்திருந்தார்.



1993 இல் தென் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த யாப்பா அபேயவர்த்தன தெரிவானார்.



மஹிந்த யாப்பா அபேயவர்த்தன 1994 ஆம் ஆண்டில் தென்மாகாண முதலமைச்சராக பதவியேற்றிருந்தார்.



1994 ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை மஹிந்த யாப்பா அபேயவர்த்தன தென் மாகாண சபையின் முதலமைச்சராக இரண்டு தடவை பதவி வகித்தார்.



மஹிந்த யாப்பா அபேயவர்த்தன வெற்றிகரமான முதலமைச்சர்களில் ஒருவராக கருதப்படுகின்றார்.



அவரது வெற்றிக்கு ஜே.வி.பி. வன்முறை உட்பட பல காரணங்களால் ஐந்துவருடங்களுக்கு மேலாக இருண்டு நிலையில் கிடந்த பொருளாதாரத்தை சிறந்த உட்கட்டமைப்பு திட்டங்களை விருத்திசெய்ததன் மூலமாக கட்டியெழுப்பியமை முக்கிய காரணமாகும்.



மஹிந்த யாப்பா அபேயவர்த்தன பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 2001 இல் மாகாண சபையில் இருந்து விலகி அவர் 2004 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.



2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன வெற்றிபெற்றதையடுத்து சுகாதார நலன்புரி பிரதி அமைச்சராக பதவிவகித்ததர்.



அதன் பின் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன கலாசார விவகார மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.



2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மஹிந்த யாப்பா அபேயவர்த்தன விவசாயத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.



இவர் அமைச்சராக இருக்கும் போது, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் துணைத் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.



2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை அடுத்து மஹிந்த யாப்பா அபேயவர்த்தன ஆரம்பத்தில் மைத்திரிபால சிறிசேன தரப்புடன் இருந்தபோது பாராளுமன்ற விவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட போதும் சில மாதங்களில் அவர் பதவியில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் எதிர் அணியில் இணைந்துகொண்டார்.



சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாட்டு அரசியலில் தன்னை ஈடுபடுத்தியுள்ள 75 வயதுடைய மஹிந்த யாப்பா அபேயவர்த்தன, இம்முறை தேர்தலில் மாத்தறை மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுணவின் சார்பில் போட்டியிட்டு 80,595 வாக்குகளைப் பெற்றிருந்தார்.



மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது 75 ஆவது வயதில் இலங்கையின் 21 ஆவது பாராளுமன்ற சபாநாகராக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தெரிவானார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

17 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

17 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

17 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

17 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

17 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

17 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை